மா.கம்யூ., செயலராக பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு!!
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு மதுரையில் நடந்தது. மாநாட்டில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் என, 553 பேர் பங்கேற்றனர்.
கட்சியின் மாநில செயலராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், 15 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களும், ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.