கவுன்சிலர்களுக்கு இலவச ஸ்கூட்டர், மாதம் 10லி ‛ப்ரீ’ பெட்ரோல்; பேரூராட்சி தலைவர் தாராளம்!!!
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பேரூராட்சியில் உள்ள 17 வார்டு கவுன்சிலர்களுக்கு ஸ்கூட்டர் மற்றும் அதற்கு மாதம் 10 லிட்டர் பெட்ரோலும் அப்பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் இலவசமாக வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள கவுன்சிலர்கள் தினமும் தங்கள் வார்டுகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து உடனடியாக அதனை சரி செய்து கொடுப்பதற்கு வசதியாக ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் புதிய வசதியை தன் சொந்த செலவில் ஏற்படுத்தி தந்துள்ளார். அதாவது, 17 வார்டு கவுன்சிலர்களுக்கும் இலவசமாக ஸ்கூட்டர் வாங்கி கொடுக்க முடிவு செய்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.