ராசாவுக்கு செக்! அமைச்சர் சிவசங்கருக்கு போக்குவரத்துத்துறை!!

பெரம்பலுார்: முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவுக்கு செக் வைப்பதற்காக, அமைச்சர் சிவசங்கருக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தி.மு.க.,வினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராகவும், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் சமீபத்தில் இலாகா மாற்றப்பட்டனர். அமைச்சர் சிவசங்கருக்கு புரமோஷனாகவும் ராஜகண்ணப்பனுக்கு டி-பிரமோஷனாகவும் கருதப்படுகிறது. போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பி.டி.ஓ., ஒருவரை ஜாதியை குறிப்பிட்டு ஒருமையில் தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அவருக்கு இலாகா மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, அமைச்சர் சிவசங்கரின் புரமோஷனுக்கு காரணம் குறித்து விசாரித்தபோது உடன்பிறப்புகள் கூறியதாவது: அமைச்சர் சிவசங்கர் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் இளைஞரணி செயலர் உதயநிதி ஆகியோரின் குட் புக்கில் இடம் பெற்றுள்ளார். காரணம், தற்போதைய அமைச்சர்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பிற்படுத்தப்பட்டோர் பள்ளி, கல்லுாரி, விடுதி, துறை அலுவலகம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து துறையை சிறப்பாக செயல்படுத்துகிறார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.