தாலுகா அலுவலகம் முன் அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமி திடீர் உண்ணாவிரதம் – பரபரப்பு!!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கிறோம் என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகபடுத்துவதாக குற்றசாட்டு எழுந்து வந்தது. 
இந்த நிலையில் தொழிற்சாலைகள் அமைக்கிறோம் என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதாக கூறி அந்த செயலை கண்டித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ. வுமான கே.பி. முனுசாமி இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

சூளகிரி தாலுகா அலுவலகம் முன்பு தனி ஒருவராக அமர்ந்து உண்ணாவிரதப் போராட்த்தை தொடங்கியுள்ளார். 5 ஆயிரம் விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாய நிலத்தை தொழிற்சாலை அமைக்கிறோம் என்ற பெயரில் விவசாயிகளின் நிலத்தை பறிக்காதே மாநில அரசே பறிக்காதே’ என்று குறிப்பிடப்பட்ட பதாகையுடன் தாலுகா அலுவலகம் முன் தனி ஒருவராக கே.பி. முனுசாமி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.  இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.