மாற்றுத்திறன் சிறுவர்களுக்கான பிரத்யேக பூங்கா!!

கோட்டூர்புரம்: கோட்டூர்புரத்தில், மாற்றுத்திறன் சிறுவர் – சிறுமியர் பயன்படுத்தும் வகையில், 2.23 கோடி ரூபாயில் கட்டமைக்கப்பட்ட பிரத்யேக பூங்கா பணி முடிந்து, திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.

சென்னை அடையாறு மண்டலம், 172வது வார்டு, கோட்டூர்புரம் 1வது குறுக்கு தெருவில், மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. அதில், 26 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 2.23 கோடி ரூபாயில், மாற்றுத்திறன் சிறுவர் – சிறுமியருளுக்கான பிரத்யேக பூங்கா அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது.

இதற்கான பணி, 2020ம் ஆண்டு, நவம்பர் மாதம் துவங்கியது. கன மழை, கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் திட்டப்பணிகளில் தொய்வு ஏற்பட்டது. ஐந்து மாதத்திற்குமுன், வேகமெடுத்த பணி ஒரே கட்டத்தில் முடிக்கப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.

Leave a Reply

Your email address will not be published.