பெட்ரோல், டீசல் விலை உயர்வு; ராகுல் தலைமையில் காங்., போராட்டம்!!
புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் தலைமையில் டில்லியில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மார்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரை நாடு முழுவதும் பேரணிகள் மற்றும் போராட்டம் ஏற்பாடு செய்யப்படும் என்று அக்கட்சி அறிவித்தது. அதன்படி, டில்லியில் உள்ள விஜய் சவுக்கில் காங்., எம்.பி., ராகுல் தலைமையில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஆதிர் ரஞ்சன், மல்லிகார்ஜூன் கார்கே உள்ளிட்ட காங்., மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.