கற்று தந்தவர்களுக்கே கற்பிக்கும் சிவகாசி!
சிவகாசி: சிவகாசியிலிருந்து 90 ஆண்டுகளுக்கு முன்பு கொல்கட்டா சென்று பட்டாசு தயாரிப்பது குறித்து உற்பத்தியாளர்கள் கற்று வந்தனர். தற்போது பட்டாசு உற்பத்தி பயிற்சி பெற கோல்கட்டா பட்டாசு தயாரிப்பாளர்களை சிவகாசிக்கு மேற்கு வங்க அரசு அனுப்பி வைத்துள்ளது.
கோல்கட்டாவில் பரைப்பூர், மெத்தியூ, நதியா உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் டி.ஆர்.ஓ., உரிமம் பெற்று குடிசைத் தொழிலாக 4 ஆயிரம் குடும்பத்தினர் பட்டாசு தயாரித்து வருகின்றனர். இவர்களுக்கு சிவகாசியில் பயிற்சியளிக்க மேற்கு வங்க அரசு முடிவு செய்தது.மானத்ரஞ்சன் தலைமையில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் 30 பேர் சிவகாசிக்கு வந்தனர்.
மேற்கு வங்க அரசு ஆலோசகர் தமிழ்செல்வன் வழிகாட்டியாக இருந்தார். பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு பயிற்சி, ஆலோசனை அளிக்கப்பட்டது. வெடிமருந்து பொருட்கள் ஆலோசகர் சுனைராஜ் மருந்துகளை பயன்படுத்துவது குறித்து விளக்கினார். பட்டாசை பாதுகாப்பாக தயாரிப்பது, பசுமை பட்டாசு தயாரிப்பது குறித்து விளக்கப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.