கோடை வெயில்: இயல்பை விட அதிகம்!!!
சென்னை—தமிழகத்தில் அதிகபட்சமாக, கரூர் மாவட்டம் பரமத்தியில், 105 டிகிரி வெப்பநிலை நேற்று பதிவானது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு:வெப்பச்சலனம் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் ஆகியவற்றில், இன்று முதல் வரும் 3ம் தேதி வரை மிதமான மழை பெய்யும். நேற்று காலை நிலவரப்படி, ஊட்டியில் 2 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தில் சில இடங்களில், நாளை வரை வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கரூர் – பரமத்தியில் நேற்று, 40.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இது, பாரன்ஹீட்டில், 105 டிகிரி. இந்த ஆண்டு கோடையில் பதிவாகியுள்ள அதிக வெப்ப நிலை. இது இயல்பை விட, 3.4 டிகிரி செல்ஷியஸ் அதிகம்.ஈரோடு, மதுரை, திருச்சி, நாமக்கல் நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல், அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு அதிகமான வெப்பநிலை பதிவானது.சென்னை, தர்மபுரி, சேலம், வேலுார், பாளையங்கோட்டை 37; கோவை, 36 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.