குப்பைக்கும் வரி! மாநகராட்சி பட்ஜெட்டில் தடாலடி….
கோவை மாநகராட்சியில் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், சொத்து வரியுடன் குப்பை வரி வசூலிக்கப்படும் என்றும், ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு மற்றும் ரேஸ்கோர்ஸ் சுற்றுச்சாலையில் வாகனங்கள் நிறுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, தி.மு.க., கவுன்சிலர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை மாநகராட்சியின், 2022-23ம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யும் நிகழ்ச்சி, விக்டோரியா ஹாலில் நேற்று நடந்தது. பட்ஜெட் புத்தகத்தை, மேயர் கல்பனாவிடம், கமிஷனர் ராஜகோபால் சமர்ப்பித்தார். அவர் வெளியிட, துணை மேயர் வெற்றிச்செல்வன் பெற்றுக் கொண்டார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.