முறைக்கும் மாணவர்கள்… அலறும் ஆசிரியர்கள்!!
கோவை: தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக, மாணவர்கள் வன்முறையை கையில் எடுக்கும் சம்பவங்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி, அலைகளை உருவாக்கியுள்ளது. பணி பாதுகாப்பு வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்காக, பள்ளிகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இது நிரந்தர தீர்வாக அமையாது என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள். குறிப்பாக, ஆசிரியர்-மாணவர் உறவில் ஏற்பட்டுள்ள இந்த இடைவெளியை நிரப்புவதற்கு, அறிவியல் பூர்வமாக தீர்வை நடைமுறைப்படுத்த, பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும். வெறும் பாடத்திட்டத்தை முடிப்பதிலும், கல்வித்துறை தரும் பாடத்திட்டத்தை சாராத பணிகளில் ஈடுபடுவதும் மட்டுமே, ஆசிரியர்களின் கடமையாக தொடர்கிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.