ஜெலன்ஸ்கி கொடுத்த துண்டு சீட்டால் கொந்தளித்த புடின்..!
இரு நாடுகளும் போரில் தீவிரம் காட்டி வருகின்றன. போர் ஒரு புறம் நடந்தாலும் பேச்சு வார்த்தைகளும் நடந்து கொண்டு உள்ளது. அந்த வகையில் துருக்கியில் நேற்று மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த போர் தொடங்கியதில் இருந்தே இதில் ரஷ்யா நாட்டின் பணக்காரரும் செல்சியா கால்பந்து நிறுவன தலைவருமான ரோமன் அப்ரமோவிச் இரு நாடுகளுக்கும் தூதுவர் போல சமாதானம் பேசி வருகிறார். ரஷ்யாவின் அலிகார்ஸ் குழுவில் ஒருவரான இவர் புட்டினுக்கு மிகவும் நெருக்கமானவரும் கூட. துருக்கி, உக்ரைன், ரஷ்யாவிற்கு அடிக்கடி மாறி மாறி சென்று பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தி வருகிறார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.