அசம்பாவிதம் நடந்தால்தான் உறக்கம் கலைவார்களா?!!
சென்னையில் பள்ளி வாகனம் மோதி, சிறுவன் பலியான சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் எதுவுமே நடக்காதது போல், கோவையில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள், விதிகளை மீறி செயல்படுவதை காண முடிகிறது. இந்த வாகனங்களின் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரித்துள்ளார்.
கோவையில் 1,400 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும், 83 மாநகராட்சி, 268 மெட்ரிக், 90 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. இதில் சுமார் ஐந்து லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். வாகன வசதியுள்ள பள்ளிகளில், மாணவர்கள் சென்று வர பள்ளி நிர்வாகமே வாகன வசதி ஏற்பாடு செய்துள்ளது.
இந்த வசதி இல்லாத பள்ளிகளுக்கு, குழந்தைகளை ஏற்றிச் செல்லும் சில ஆட்டோக்கள், ஆம்னி வேன்கள் விதிமுறைகளை காற்றில் பறக்க விடுகின்றனர். அதிக எண்ணிக்கையில் மாணவ, மாணவியரை ஏற்றிச்செல்கின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.