திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் பைக்குகள்!!!
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பலரும் எலக்ட்ரிக் பைக்குகள் பக்கம் திரும்பியுள்ளனர். பேட்டரியில் இயங்கும் இந்த இ-பைக்குகள் ஒருமுறை சார்ஜ் செய்தால் சில கி.மீ தூரமே சென்றாலும், தற்போதைய சூழலில் மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். மத்திய அரசும் சுற்றுச்சூழலுக்கு மாசுப்பாட்டினை கருத்தில் கொண்டு எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குமாறு அறிவுறுத்தி வருகிறது. இ-பைக்குகள் பயன்பாடு சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் இ-ஸ்கூட்டர்கள் திடீரென தீப்பிடித்து எரியும் நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளது. கடந்த வாரம் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஓலா நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த வீடியோ காட்சி வைரலானது. சாலையில் நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டரில் இருந்து முதலில் புகை வந்துள்ளது. அடுத்த சில நொடிகளில் மளமளவென தீப்பற்றி எரிந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.