ஏப்.,4 முதல் உச்சநீதிமன்றத்தில் முழு நேரடி விசாரணை!
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் வரும் ஏப்.,4ம் தேதி முதல் முழு அளவில் நேரடி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி ரமணா அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கோவிட் பரவல் அதிகரிக்க துவங்கியதும் நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும், கடந்த 2 ஆண்டுகளாக காணொலி காட்சி வாயிலாகவே வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தது. வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே நேரடி விசாரணை நடத்தப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.