குடிநீர் வினியோகம் பாதிப்பு; காலி குடங்களுடன் மக்கள் மறியல்!!

மேட்டூர்: மேட்டூர் நகராட்சி இரண்டாவது வார்டு உள்ள வீரம்பட்டி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர் கடந்த இரு நாட்களாக இப்பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிப்பு இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று காலை 9:45 மணிக்கு மேட்டூர் அணை அடிவாரம் கொளத்தூர் மேட்டூர் நெடுஞ்சாலை அருகே அமர்ந்து காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கொளத்தூர் மேட்டூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.

Leave a Reply

Your email address will not be published.