கந்துவட்டி கொடுமை; கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில், வாரம்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் நடக்கிறது. இன்று (மார்ச் 28) மக்கள் குறைதீர்வு நாளின்போது, கந்து வட்டி கொடுமை காரணமாக தனது குழந்தையுடன் பெற்றோர்கள் உடலில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தடுத்து நிறுத்திய போலீசார், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.