காஞ்சியில் ‘பிளாஸ்டிக்’ கழிவுகளில் அமைகிறது சாலை!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், படப்பை உட்பட ஆறு கிராம ஊராட்சிகளில், தலா 16 லட்சம் ரூபாய் மதிப்பில், பிளாஸ்டிக் கழிவுகளை துாளாக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பிளாஸ்டிக் கழிவுகளை வைத்து சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐந்து ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. மொத்த 2.16 லட்சம் குடியிருப்புகள் உள்ளன.இந்த வீடுகளில் அன்றாடம் சேகரமாகும் நுாற்றுக்கணக்கான டன் குப்பை, மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரிக்கப்படுகிறது.மாவட்டத்தில், 24 இடங்களில், மக்கும் குப்பையை துாளாக்கி, உரமாக மாற்றும் பணிகள், பல நாட்களாகவே நடைபெற்று வருகின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.