ஒழுங்கற்ற மாதவிடாயை சரி செய்ய வேண்டுமா? இதோ எளிய டிப்ஸ்….

மாதவிடாய் சுழற்சி என்பது பருவமடைந்த பெண்களுக்கு 28 முதல் 32 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படுவதாகும்.

மாதவிடாய் சீராக இல்லாமல் அதிக நாட்கள் கழித்தோ அல்லது குறைவான நாட்களிலோ அடிக்கடி மாதவிடாய் வந்தால் உடலுக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

Oligomenorrhoea, இந்த பிரச்சனையால் மாதவிடாய் குறைந்த மாதங்களுக்கு மட்டுமே நிகழும்.

இதில் இருந்து விடுபட கீழே குறிப்பிடப்பட்டுள்ள வைத்தியமுறைகளில் ஒன்றை பின்பற்றினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • இரவில் எள்ளு விதைகளை தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை பருகினால் பலன் அடைவது நிச்சயம்.
  • சீரக விதையின் மாவை நீரில் ஊறவைத்து அந்த நீரை பருகினால் மாதவிடாயின் போது வயிற்று வலி போன்ற உபாதைகள் இருக்காது. இதில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளதால் மாதவிடாயின் போது இரம்பு சத்து குறைப்பாடு நிகழ்ந்தால் இந்த விதைகள் காக்கும்.
  • பப்பாளியை தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டால் மாதவிடாய் சுழற்சி ஒழுங்காக நடைபெறும். மெனோபாஸ் பிரச்சனைகளுக்கான சரியான தீர்வு பப்பாளி.
  • ஈஸ்ட்ரோஜனை ஒழுங்காக செயல்பட வைக்க செம்பருத்தி பூ உதவும். இதனால் மாதவிடாய் சுழற்சி ஒழுங்காக இருக்கும்
  • ஒரு மேசைக்கரண்டி தேனுடன் சம அளவில் துளசி சாற்றை எடுத்து கொண்டால் இதன் மருத்துவ குணத்தை முழுமையாக அடைய முடியும். இதனால் மாதவிடாயின் போது வரும் கீழ் முதுகு வலி சீராகும்.
  • கற்றாழை ஜெல்லை தேனுடன் கலந்து தினமும் காலையில், சாப்பிடுவதற்கு முன் இதனை சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக மாதவிடாய் சார்ந்த கோளாறுகள் குணமடையும்.
  • ஒரு குவளை பாலில் 1/2 டீஸ்பூன் இலவங்க தூளை சேர்த்து தினமும் குடித்து வந்தால் இது குணமடையும்.
  • ஆலமர வேரினை நீரில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, அதனுடன் பால் கலந்து, தினமும் இரவு தூங்குவதற்கு முன் குடிக்க வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Leave a Reply

Your email address will not be published.