இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!!

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிரனடாவில் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 204 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் 297 ரன்னும் எடுத்தன. 

அடுத்து 93 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை படுமந்தமாக ஆடிய இங்கிலாந்து 60.4 ஓவர்களில் 120 ரன்னில் அடங்கியது. வேகப்பந்து வீச்சாளர் கைல் மேயர்ஸ் 5 விக்கெட்டுகளை அள்ளினார். 
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 28 ரன்கள் இலக்கை நோக்கி 4-வது நாளான நேற்று 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. 
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி ரிச்சர்ட்ஸ்-போத்தம் கோப்பையை வசப்படுத்தியது. முதல் இரு டெஸ்டுகள் டிராவில் முடிந்தன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.