சென்னையை பசுமையாக்கும் முயற்சி… அடையாறு ஆற்றை ஒட்டி சதுப்பு நில காடு!!
சென்னையில் பசுமையை மீட்டெடுக்கவும், புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்கவும், அடையாறு ஆற்றங்கரையில் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் சதுப்பு நில காடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
செங்கல்பட்டு மாவட் டம், ஆதனுார் கிராமத்தில் துவங்கி, சென்னை பட்டினம்பாக்கம் வரை உள்ள அடையாறு ஆறு, 42.6 கி.மீ., உடையது. மண்ணிவாக்கம், வரதராஜபுரம், முடிச்சூர், திருநீர்மலை, அனகாபுத்துார், மணப்பாக்கம், சைதாப்பேட்டை வழியாக, பட்டினப்பாக்கம் கடலில் கலக்கிறது. இந்த ஆறு, இடத்திற்கு ஏற்ப, 100 அடி முதல், 1,640 அடி வரை அகலம் கொண்டது. ஆக்கிரமிப்பால், பாதியாக சுருங்கியது. காஞ்சிபுரம் மாவட்ட வடகிழக்கு பகுதிகள் மற்றும் தென்சென்னை புறநகர் பகுதியில், மழைக்காலங்களில் வெளியேறும் உபரி நீரை, கடலுக்கு கொண்டு செல்லும் பணியை, அடையாறு ஆறு செய்கிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.