ஒரே வாகனத்துக்கு 46 வழக்கு ரூ.24 ஆயிரம் அபராதம் வசூல்!!
பெங்களூரு : இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது போக்குவரத்து விதிகளை மீறியதாக 46 வழக்குகள் பதியப்பட்டு இருந்தது. 24 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
பெங்களூரு காமாட்சிபாளையா பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிவண்ணா வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி ஆவணங்களை ஆய்வு செய்தார். அவரது வாகனம், பல்வேறு இடங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக, 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 24 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீற கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.