ஆடு, மாடு அறுவை மனை ரூ.1 கோடிக்கு ஏலம்!!!


கோவை: கோவை – சத்தி ரோட்டில் உள்ள மாநகராட்சி ஆடு, மாடு அறுவைமனையில் கட்டணம் வசூலிக்கும் உரிமம், ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் சென்றது. இதனால், மாநகராட்சி வருவாய் பிரிவினர், இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

கோவை – சத்தி ரோட்டில் உள்ள ஆடு, மாடு அறுவைமனையில் கட்டணம் வசூலிக்கும் உரிமத்துக்கான பொது ஏலம், மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடந்தது.உதவி கமிஷனர் (வருவாய்) செந்தில்குமார் ரத்தினம் முன்னிலையில் ஏலம் கோரப்பட்டது; ஏராளமானோர் பங்கேற்றனர்.ரூ.75 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தியிருந்தனர்.

2022-23 முதல், 2024-25 வரையிலான மூன்றாண்டு காலத்துக்கு ஏலமிடப்பட்டது. பொது ஏலம் கோரியவர்கள், போட்டி போட்டுக்கொண்டு தொகையை உயர்த்திக் கொண்டே சென்றனர். இறுதியாக ஒருவர், ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் கோரினார். அதைக்கேட்டு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

அத்தொகையை செலுத்த முடியுமா என்கிற கேள்வி எழுந்தபோது, சிறிது நேரம் அவகாசம் அளித்தால், கூடுதல் வைப்புத்தொகை செலுத்துவதாக, ஏலம் கோரியவர் கூறியிருக்கிறார். 30 நிமிட அவகாசத்துக்குள், அத்தொகையை செலுத்தியிருக்கிறார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Leave a Reply

Your email address will not be published.