உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47 கோடியை தாண்டியது..!
உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 41 கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,694,318 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 477,749,021-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1,250,215 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில் இதுவரை 412,747,003 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 58,868,998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவால் இதுவரை உலகம் முழுவதும் 6,133,020பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.