உலக டேபிள் டென்னிஸ்: வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் சத்யன்- மணிகா பத்ரா ஜோடி..!

உலக டேபிள் டென்னிஸ் ‘கன்டெண்டர்’ தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. இதில் கலப்பு இரட்டையர் இறுதி சுற்றில் இந்தியாவின் சத்யன்- மணிகா பத்ரா ஜோடி 4-11, 5-11, 3-11 என்ற செட் கணக்கில் நம்பர் ஒன் ஜோடியான சீனதைபேயின் செங் சிங்- லின் யுன் ஜூ இணையிடம் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தது. 

ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் தமிழகத்தின் சரத் கமல் 5-11, 11-8, 6-11, 11-7, 11-5, 10-12, 9-11 என்ற செட் கணக்கில் சீனாவின் யுவான் லிசென்னிடம் போராடி தோல்வி அடைந்தார். இருப்பினும் சரத் கமலுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.