‘குளு குளு’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கினார் சந்தானம்..!!
நடிகர் சந்தானம் தற்போது இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் நகைச்சுவைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘குளு குளு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன், சேசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை ராஜ் நாராயணன் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளார்.
இந்த நிலையில் படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சந்தானம் ‘குளு குளு’ படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். சந்தானம் டப்பிங் பேசும் புகைப்படத்தை படத்தின் இயக்குனர் ரத்ன குமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.