உரிமம் பெற்ற பிரசாத கடைக்கும் ‘சீல்’; பின்னணி என்ன? அதிகாரிகளின் உள்நோக்கம் அம்பலம்!!

உணவுப் பாதுகாப்புத்துறையின் சோதனை நடவடிக்கையை தொடர்ந்து, சென்னை வடபழனி முருகன் கோவில் பிரசாதகடைகான்ட்ராக்டரிடம்கோவில் நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ளது. அதேவேளையில், தரச்சான்றுபெற்ற கடையிலும் சோதனை நடத்தியதுடன், பிரசாத பொருட்களின் மாதிரி சேகரித்து ஆய்வறிக்கை பெறாமலே கடைக்கு ‘சீல்’ வைத்த பின்னணி குறித்த தகவல்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

கடந்த பிப்ரவரி, 16ம் தேதி சென்னை, வடபழனி முருகன் கோவிலுக்கு வந்த உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கிருந்த பிரசாத ஸ்டாலை ஆய்வு செய்கிறார்கள். அப்போது, கோவிலில் நிற்கக்கூட இடமில்லாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம். கும்பாபிஷேகம் முடிந்து மண்டல அபிேஷகம் நடந்து கொண்டிருந்தது. இதற்கு நடுவேதான் அதிகாரிகளின் ஆய்வும் நடக்கிறது.இது குறித்து தகவலறிந்த கோவில் ஊழியர்கள் அங்கு வந்தனர். அவர்களிடம், ‘கடைக்கான உணவு பாதுகாப்பு மற்றும்தரச்சான்றிதழ் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை.

இவர்களுக்கு கடை நடத்த எப்படி அனுமதி அளித்தீர்கள்’ என, கேள்வி எழுப்பினர்.இதற்கு கடைக்காரர், ‘கொரோனா ஊரடங்கு காலத்தில், 102 நாட்களாக கோவில்கள் மூடப்பட்டிருந்தன. பிரசாத கடைக்கான உரிமம் அந்த நாட்கள்அளவில் செல்லத்தக்கதாகவே இருந்தது.’ஊரடங்கு முடிந்து கோவில்கள் திறக்கப்பட்டபின், மேற்கண்ட 102 நாட்களுக்கான இழப்பினை ஈடுகட்டிக்கொள்ளலாம் என, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்து உத்தரவிட்டது. ‘இந்த சமயத்தில் உணவுப் பாதுகாப்புத்துறையின் உரிமம் காலாவதியாகியிருந்தது; அதை புதுப்பிக்க அரசு அலுவலகமும் திறந்திருக்கவில்லை.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.

Leave a Reply

Your email address will not be published.