நடிகை பலாத்கார வழக்கில் திலீப்புக்கு மீண்டும் சிக்கல்: நாளை விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்!!!
திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராக கூறி நடிகர் திலீப்புக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது..பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் மீதான பிடியை போலீஸ் இறுக்கி வருகிறது. விசாரணையை கடந்த பிப்ரவரி மாதத்திற்குள் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று எர்ணாகுளம் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரிகளை கொல்ல நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டினார் என்றும், நடிகையின் பலாத்கார காட்சிகள் நடிகர் திலீப்பிடம் இருப்பதாகவும் டைரக்டர் பாலச்சந்திரகுமார் கூறியது இந்த வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகர் திலீப்பிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளனர். நாளை (24ம் தேதி) விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அவருக்கு குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். ஆனால் அன்றைய தினம் தனக்கு வேறு ஒரு முக்கிய அலுவல் இருப்பதால் விசாரணையை தள்ளி வைக்கவேண்டும் என்று திலிப் போலீசிடம் தெரிவித்துள்ளார். திலீப்பின் கோரிக்கையை போலீஸ் ஏற்கவில்லை.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.