ஓய்வு முடிவை அறிவித்த உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி, சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார். தொடர்ந்து பல வெற்றிகளை குவித்து வந்த ஆஷ்லி பார்ட்டி, தனது 25-வது வயதில் ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், தனக்கு தனிப்பட்ட முறையில் பல கனவுகள் உள்ளதாகவும், ஆனால் உலகம் முழுவதும் சுற்றி தனது குடும்பத்தையும், சொந்த ஊரையும் பிரிந்து இருக்க தன்னால் முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் டென்னிஸ் விளையாட்டை தான் மிகவும் நேசிப்பதாகவும், தனது வாழ்வில் அது என்றும் ஒரு அங்கமாக இருக்கும் என்று கூறியுள்ள அவர், தனது வாழ்வின் அடுத்த பகுதியை ஒரு விளையாட்டு வீராங்கனையாக இல்லாமல், ஒரு சாதாரண நபராக அனுபவிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
ஆஷ்லி சுமார் 121 வாரங்களாக உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்துள்ளார். குறுகிய காலத்தில் 15 சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ள அவர், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ், 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள், 2021 விம்பிள்டன் கோப்பை, 2019 பிரன்ஞ்ச் ஓபன் டென்னிஸ் கோப்பை ஆகியவற்றை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.