ஹிந்து கோவில் கட்ட ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கிய முஸ்லிம்….

பாட்னா: பீஹாரில் கட்டப்பட உள்ள உலகின் மிகப்பெரிய ஹிந்து கோவிலுக்கு, 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முஸ்லிம் குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

பீஹார் மாநிலம், கிழக்கு சம்பரான் மாவட்டம் கைத்வாலியா பகுதியில், உலகின் மிகப்பெரிய ஹிந்து கோவிலாக விராட் ராமாயண் மந்திர் கட்டப்பட உள்ளது. பாட்னாவை சேர்ந்த மஹாவீர் மந்திர் அறக்கட்டளை இப்பணிகளை மேற்கொள்கிறது. உயரமான கோபுரங்களுடன் 18 கோவில்களும், சிவன் கோவிலில் உலகின் மிகப்பெரிய லிங்கமும் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அறக்கட்டளை சார்பில், 125 ஏக்கர் நிலம் பெறப்பட்டு உள்ளது.

அசாமின் கவுஹாத்தியில் தொழில் அதிபராக இருக்கும் கிழக்கு சம்பரான் மாவட்டத்தைச் சேர்ந்த இஷ்தியாக் அகமது கான் என்பவரும், 2.5 கோடி ரூபாய் நிலத்தை நன்கொடையாக வழங்கி உள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.

Leave a Reply

Your email address will not be published.