ஒப்புக்கு சப்பாணியா தான் அரசை கண்டிக்கிறீங்க…
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:தமிழகத்தில் உள்ள 2.16 கோடி இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் தருவதாக கூறி ஏமாற்றி விட்டு, ‘அவலை காட்டி உரலை விழுங்குவது’ போல் மாணவியருக்கு 1,000 ரூபாய் வழங்குவதாக கூறுகின்றனர். யானைப் பசிக்கு சோளப் பொரி என்பது போல, மோசடி வித்தை செய்துள்ளனர். இனிமேல், பஸ் கட்டணம், மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி போன்றவற்றை உயர்த்தி, மக்களுக்கு பரிசு கொடுக்கப் போகின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.