இந்தியாவில் மேலும் 2,542 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து நலம்!!

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 2,542 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,778 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,12,749 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 2,542 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,24,73,057 ஆனது. தற்போது 23,087 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

Leave a Reply

Your email address will not be published.