படிக்கட்டு ‘பதவி’ வேண்டாம்: பஸ்சில் தொங்கும் மாணவருக்கு ‘அட்வைஸ்’!!
திருப்பூர்: அரசு மற்றும் தனியார் பஸ்களில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பாதுகாப்பற்ற முறையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதாக பல தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து ஆணையர் மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் தலைமையில் சென்னையில் சமீபத்தில் கூட்டம் நடந்தது. அவ்வகையில், திருப்பூர் மாவட்ட வழித்தடங்களில், திருப்பூர் முதல் கோவை வழித்தடம், உடுமலை முதல் தளி, உடுமலை முதல் பொள்ளாச்சி, வஞ்சிபாளையம் முதல் திருப்பூர் பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட் மார்க்கம், பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் காங்கயம் ரோடு, தாராபுரம் ரோடு வழித்தடங்கள் பாதுகாப்பற்ற பயண வழித்தடங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.