இது உங்கள் இடம்: பட்ஜெட் திட்டங்கள் கானல் நீர் தான்!
என். வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சமர்ப்பித்துள்ள, 2022- – 23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, வழக்கம் போல தி.மு.க.,வின் கூட்டணி கட்சித் தலைவர்கள், ‘சூப்பர் பட்ஜெட்; வளர்ச்சிக்கு வழி வகுக்கும் அருமையான பட்ஜெட்’ என்று புகழ்ந்து தள்ளியுள்ளனர். அ.தி.மு.க.,வினரோ, ‘வெத்து வேட்டு பட்ஜெட்’ என்று விமர்சித்திருக்கின்றனர்.
தமிழக அரசின் கடன் சுமை, 6.53 லட்சம் கோடி ரூபாயாக உயர உள்ளது மகத்தான சாதனை தான். நடப்பு நிதியாண்டில், 49 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கப் போவதாகச் கூறியிருந்தனர். வரும் ஆண்டில், 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளனர். மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்க, உண்மையான பயனாளிகளை கண்டறியும் பணியை முடுக்கி விட்டுள்ளோம். அது, நல்லபடியாக முடிந்தால் நிச்சயம் தருவோம். அதுவரை உங்களுக்கு பட்டை நாமம் தான் என்கிறார் நிதி அமைச்சர் தியாகராஜன்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.