நாளை துபாய் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!!
சென்னை: துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச தொழில் கண்காட்சியில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை (மார்ச் 24) மாலை துபாய் செல்ல உள்ளார்.
துபாயில் கடந்த சில மாதங்களாக சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகள் பங்கேற்கும் இந்த கண்காட்சியில் ஒவ்வொரு நாட்டு பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியா சார்பில் அமைக்கப்பட்ட அரங்கை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திறந்து வைத்திருந்தார். அதில் தமிழகத்திற்கான இடத்தில் தமிழகத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.