உலகப் பாவை தொடர் -3
உலகப் பாவை-தொடர்-3
உயிர் பிறப்பால் ஒன்றே
விண்மண்நீர் நெருப்பு காற்று விந்தாகிச் சேர்ந்த சேர்க்கை மண்ணுலக மனிதன்; எல்லா வளர்உறுப்பும் மனிதர்க் கொன்றே!
அன்பெனும்நல் வேலி யிட்ட அன்னையின் வயிறு தானே மண்ணிடைஎம் மனித ருக்கும் வாய்த்திட்ட பிறப்புக் கூடு!
வண்ணத்தில் குருதி என்றும் மாறுவதோ மனிதர்க்
கில்லை;
எண்ணுகிற ஆற்றல் கூட எல்லார்க்கும் உண்டே? எங்கே
உண்டிங்கு வேறு பாடு?
‘உயிர்பிறப்பால் ஒன்றே’ என்னும்
உண்மையுயிர் பெற்று லாவ உலாவருவாய் உலகப் பாவாய்!
- கு. மோகனராசு
நிறுவனர்
உலகத் திருக்குறள் மையம்