2 ஆயிரம் குழந்தைகளை ரஷியா கடத்திச் சென்றுவிட்டது- உக்ரைன் பகீர் குற்றச்சாட்டு

உக்ரைன் மீது ரஷியா 27-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இருந்தாலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் உக்ரைன் மீது ரஷியா நடத்தும் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த நிலையில் போரின் போது உக்ரைன் நாட்டை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை ரஷியா கடத்தியுள்ளதாக உக்ரைன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் நாட்டில் ரஷியா வசம் உள்ள டான்பாஸ் பகுதியில் இருந்து 2,389 குழந்தைகள் ரஷியாவிற்கு சட்டவிரோதமாக நாடு கடத்தப்பட்டுள்ளளதாக அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு நடந்த ரஷிய-உக்ரேனியப் போருக்குப் பின்னர் டான்பாஸ் பகுதி முழுவதுமாக ரஷியா வசம் சென்றது. 
ரஷியா தனது படையெடுப்பில் குழந்தைகளை தொடர்ச்சியாக குறிவைப்பதாக  உக்ரைன் ஏற்கனவே குற்றம்சாட்டி  இருந்த நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

Leave a Reply

Your email address will not be published.