அ.தி.மு.க.,வினருடன் காங்.,- கம்யூ.,மோதல்: மாமன்ற கூட்டத்தில் ‘அனல்’ பறந்த விவாதம்!!
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர் முதல் கூட்டம் நேற்று நடந்தது. அ.தி.மு.க., கவுன்சிலர் நீண்ட பேச்சுக்கு கம்யூ., – காங்., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பினரும் காரசாரமாக வாக்குவாதம் செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் முதல் கூட்டம் நேற்று மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கில் நேற்று காலை 10:20 மணிக்கு மேயர் தினேஷ்குமார் தலைமையில் துவங்கியது. துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் கிராந்திகுமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் துவங்கியவுடன் மேயர், தீர்மானங்களை வாசித்து, அது குறித்து கவுன்சிலர்களை பேச அழைத்தார். முதலில் 22வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் பேசினார். அதனை தொடர்ந்து மற்ற கவுன்சிலர்கள் பேசினர்.கவுன்சிலர்கள் பேசியதன் தொகுப்பு:
குடிநீர் பற்றாக்குறைமாநகராட்சிக்கு வழங்கப்படும் குடிநீர்த் திட்டங்களில் பெறப்படும் குடிநீர் அளவு, வினியோக அளவு கண்காணிக்க வேண்டும். 12 முதல் 15 நாள் வரை குடிநீர் கிடைப்பதில்லை. முறையாக ஆய்வு செய்து குறைந்த பட்சம் 5 நாளுக்கு ஒருமுறையாவது அனைத்து பகுதிக்கும் குடிநீர் வழங்க வேண்டும்.
* குழாய் உடைப்புகள் உடனுக்குடன் சரி செய்து குடிநீர் வீணாவது தவிர்க்க வேண்டும். கோடை காலமாக உள்ளதால், ஆழ் குழாய் கிணற்று நீர் தேவையான அளவு வழங்க வேண்டும். 4 வது குடிநீர் திட்டம் பயன்பாடுக்கு வரும் வரை, லாரி மூலம் குடிநீர் வழங்க வேண்டும்.
* குடிநீர் முறையாக சப்ளை செய்ய வேண்டும். குழாய் பதிப்பு பணிக்கு தோண்டிய ரோடுகள் முறையாக மூடப்படாமல் உள்ளது.குப்பை பிரச்னை* குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படுவதில்லை. துாய்மை பணியாளர்கள் கூடுதலாக நியமிக்க வேண்டும். குப்பை அகற்றும் வாகனங்கள் கூடுதலாக தேவை.
* குப்பை தொட்டிகள் பெரும்பாலான பகுதிகளில் இல்லாத நிலை உள்ளது. மழை மற்றும் கழிவு நீர் கால்வாய் பெருமளவு குப்பை மற்றும் மண் நிறைந்து துார் வாரப்படாமல் உள்ளது.பொது விஷயங்கள்நகரில் முக்கிய பகுதிகளில் பாலம் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. பிரதான ரோடுகளில் பறக்கும் பாலம் அமைக்க வேண்டும். தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. புதிதாக இணைக்கப்பட்ட பல பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.