புதிய பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில் திணறல்; அனைத்தையும் ‘சிங்கார சென்னை’யில் சேர்ப்பு

வரும் நிதியாண்டில் 5,000 கோடி ரூபாய்க்கான பட்ஜெட் தாக்கல் செய்ய மாநராட்சி நிர்வாகம் தயாராகி வருகிறது. இம்மாதம், 25 அல்லது 26ம் தேதி, மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், மண்டல குழு தலைவர்கள், நிலைக்குழு தேர்வு ஆகியவை, 30, 31ம் தேதிகளில் நடைபெற உள்ளது. எனவே, அதற்கு முன் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நிலைக்குழு தேர்வு செய்யப்படாததால், பட்ஜெட்டை மாநகராட்சி மேயர் பிரியா தாக்கல் செய்வார்.

பட்ஜெட் குறித்து மேயர், துணை மேயர், கமிஷனர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். இதில், மழைநீர் வடிகால், சாலை, மேம்பாலம், கல்வி உள்ளிட்ட வழக்கமான துறை சார்ந்த நிதி ஒதுக்கீடு என, 5,000 கோடி ரூபாய்க்கான பட்ஜெட் இடம்பெறும். மேற்கண்ட பணிகளில் பெரும்பாலானவை, ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட வாய்ப்புள்ளது. ஒரே திட்டத்தின் பெயரில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல்வேறு பணிகள் முடிக்க திட்டமிட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

Leave a Reply

Your email address will not be published.