அன்னாசி பழத்தின் பயன்!
அன்னாசி பழத்தின் சுவை போலவே அதன் குணங்களும் அற்புதமானது. அனைவரும் விரும்பி சாப்பிடும் பழ வகைகளில் ஒன்றே அன்னாசி பழம்.
தாழை இலை போன்ற நீண்ட அடுக்கான மடல்களை உடைய செடி. கொல்லிமலை போன்ற இடங்களில் பேரளவில் பயிரிடப் பெற்றுப் பழமாக விலைக்குக் கிடைக்கும். இப்பழம் பூந்தாழம் பழம் எனவும் வழங்கப்பெறும். இலை பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
நுண்புழுக் கொல்லுதல், வியர்வை சிறுநீர் பெருக்குதல், மலமிளக்குதல், குருதிப்பெருக்கைத் தணித்தல், மாதவிலக்கைத் தூண்டுதல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.
நோய் தொற்றுகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து, எலும்புகளுக்கு தேவையான கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்களை கொடுத்து வலிமை பெற செய்கிறது.
வைட்டமின் பி அதிகம் காண படுவதால் பெண்கள் அதிகம் எடுத்து கொள்ள உடல் ஆரோக்கியம் பெற்று, பல வியாதிகளிடம் இருந்து தற்காத்து கொள்ளலாம்.
அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.
இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம்.
அன்னாசிப்பழம் உடல் சூட்டினை அதிகரிக்கக்கூடியது. அதனால் இதனை அளவாகச் சாப்பிடலாம். தயிருடன் சேர்த்துச் சாப்பிடலாம். பழரசமாக, நீர் சேர்த்துச் சாப்பிடலாம். மற்ற காய்கறி சாலட்களுடன் சேர்த்துச் சாப்பிடலாம். கர்ப்பிணிப் பெண்களும், மூல நோய் உள்ளவர்களும் இப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.
K.N. அப்துல் ரசாக்
செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்