ஒப்பந்ததாரர்கள் மதிப்பதில்லை… பெண் கவுன்சிலர் குமுறல்!
சிவகங்கை : ஒப்பந்தகாரர்களை முடிவு செய்யும் போது ஒன்றிய தலைவர் ,கவுன்சிலர்களை கலந்து ஆலோசனை செய்ய வேண்டும் என்றும், ஒப்பந்தாரர்கள் கவுன்சிலர்களை மதிப்பதில்லை என்று பெண் கவுன்சிலர் குமுறினார்.
சிவகங்கை ஒன்றிய கூட்டம் மார்ச் 15 ல் போதிய கவுன்சிலர்கள் வராத நிலையில் ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று காலை மீண்டும் கவுன்சில் கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தலைவர் மஞ்சுளா, துணைத்தலைவர் கேசவன், உட்பட 18 கவுன்சிலர்களில் 13 பேர் பங்கேற்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புசெல்வி,ரத்தினவேல் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதம்:அழகர்சாமி, கவுன்சிலர்: சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.