இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்க திட்டம்: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னை: சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது:
* பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், வேளாண் தொழிலை உச்சத்திற்கு கொண்டு செல்லும்.
* கடந்த ஆண்டின் 86 வகையான அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
* காலநிலை மாற்றத்தை தாங்கி வளரகூடிய பயிர் வகைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* கடந்த 2021- 22ல் நெல்சாகுபடி அதிகரித்துள்ளதுடன் தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்கப்பட்டன.
* சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க திட்டங்களை அரசு செயல்படுத்தப்படும்
* மாவட்ட மாநில அளவில் சிறுதானிய திருவிழா
* 7500 ஏக்கரில் இயற்கை வேளாண் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி
* நெல் ஜெயராமன் பெயரில் 200 ஏக்கரில் பாரம்பரிய விதைகளை உற்பத்தி செய்து 20 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்
* விதை மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 30 ஆயிரம் மெட்ரிக் டன் விதைகள் வழங்கப்படும்
* வேளாண் துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு
* வேளாண் பொருட்களின் விதை முதல் விற்பனை வரை தெறிந்து கொள்ள புதிதாக செயலி உருவாக்கம்
* உரம் பயன்பாடு,பூச்சி கொல்லி பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க 7 உழவர் பயிற்சி நிலையங்கள் அமைப்பு
* ட்ரோன் மூலம் பூச்சி கொல்லி மருந்து தெளிப்பு
* மழையில் இருந்து விவசாய பொருட்களை பாதுகாக்க 60 ஆயிரம் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள்
* சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 2 மண்டலங்கள்
* வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை நடவடிக்கை ஏற்பாடு
* தஞ்சை, சேலம், திருவள்ளூர், நெல்லை, விழுப்புரம் மாவட்டங்களில் சோயா பீன்ஸ் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை
* சமையல் எண்ணெ் விலையை கட்டுப்படுத்த சூரியகாந்தி சாகுபடி பரப்பு அதிகரிப்பு
* கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் துவரை உற்பத்தி மண்டலங்கள்
* கோவை, தேனி கன்னியாகுமரியில் தனியார் பங்களிப்புடன் புதிய காய்கறி விற்பனை வளாகம் அமைக்கப்படும்.
* வேளாண்மை துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.33,007.68 கோடி நிதி ஒதுக்கீடு
* பயிர் காப்பீடு திட்டத்திற்கு மாநில அரசின் பங்கீடாக ரூ.2,339 கோடி
* 9.26 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடாக ரூ.2,055 கோடி வழங்கப்பட்டுள்ளது
* மாநில வேளாண் வளர்ச்சிக்கு புதிதாக திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.71 கோடி ஒதுக்கீடு


* வேளாண் பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு தொழில் துவங்க தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். இதற்காக ரூ.2 கோடி.
* இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.400 கோடி
* மரம் வளர்ப்பு திட்டத்தின் கீழ் இலவச தென்னங்கன்று வழங்க ரூ.300 கோடி
* மயிலாடுதுறையில் மண் பரிசோதனை கூடம் அமைக்க ரூ.75 கோடி
* இயற்கை உரங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு குழுவிற்கும் தலா ரூ.1 லட்சம்
* பருத்தி உற்பத்தியை அதிகரிக்க ரூ.15 கோடி
* கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2,950 ஆக நிர்ணயம்
* கரும்பு சாகுபடிக்கு உதவித்தொகையாக ரூ.10 கோடி
* கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.195 வழங்கப்படும்
* சூரிய காந்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ.28 கோடி
* பருவம் இல்லாத தக்காளி சாகுபடி ஊக்குவிக்க ரூ.4 கோடி
* உழவர் சந்தைகளில் காய்கறிகளின் வரத்தை அதிகரிக்க சிறப்பு திட்டத்திற்கு ரூ.5 கோடி
* பண்ணை சாகுபடி முறையில் இயந்திரமயமாக்கல் திட்டதை்த ஊக்குவிக்க ரூ.150கோடி
* சென்னை, திருச்சியில் எஞ்சிய நச்சு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்க ரூ15 கோடி
* மஞ்சள், இஞ்சி ஆகியவற்றுக்கான இடுபொருட்களுக்காக ரூ.3 கோடி
* ஆதி திரவிட பழங்குடியி சிறு குறு விவசாயி கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்க ரூ.5 கோடி;
* பூண்டி சாகுபடியை அதிகரிக்க ரூ1 கோடி
* 50 இடங்களில் இயங்கி வரும் உழவர் சந்தைகளை சீரமைக்க ரூ.15 கோடி
*10 இடங்களில் புதிய உழவர் சந்தைகள் அமைக்க ரூ.10 கோடி
* தமிழக மாநில மரமான பனைமரங்களை பாதுகாக்க நடவடிக்கை. 10 லட்சம் பனை விதைகள் விநியோகம் செய்யப்படுவதுடன், மதிப்பு கூட்டப்பட்ட பனை மரங்களை தயாரிக்க உபகரணங்களை தயாரிக்க 75 சதவீத மானியம் வழங்கப்படும். இதற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு. பனைமரம் ஏறும் சிறந்த கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்க பரி சு வழங்கப்படும்.
*கருப்பட்டி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், அதன் உற்பத்திக்கு சிறப்பு மானியம்
* காய்கறிகள், பழங்கள், மலர் சாகுபடி மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்க மாற்றுப்பயிர் திட்டத்தை 20 ஆயிரம் ஏக்கரில் செயல்படுத்த ரூ.16 கோடி
* தேனீ வளர்ப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ.10.25 கோடி
* கொல்லிமலை, கல்வராயன்மலை உள்ளிட்ட இடங்களில் பூண்டு சாகுபடியை அதிகரிக்க ஊக்குவிக்கப்படுவதுடன் ஏக்கருக்கு ரூ. 8 ஆயிரம் வழங்கப்படும்.
* தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.30 கோடி. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.

Leave a Reply

Your email address will not be published.