பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம்: 10 பேர் பதவியேற்பு!
சண்டிகர்: பஞ்சாப் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
பஞ்சாபில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, கடந்த 16ல் பக்வந்த் மான் முதல்வராக பதவியேற்று கொண்டார். அதற்கு அடுத்த நாள் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பதவியேற்றனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் இந்தர்பிர் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பஞ்சாப் அமைச்சரவையில், முதல்வரையும் சேர்த்து 18 பேர் அமைச்சர்களாக நியமிக்க முடியும். இன்று(மார்ச் 19) அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இன்று, ஹர்பல் சிங், பல்ஜித் கவுர், ஹர்பஜன் சிங் இடோ, விஜய் சிங்லா, லால் சந்த், குர்மீத் சிங், குல்தீப் சிங், லால்ஜித் சிங் புலர், பிரஹம் சங்கர், ஹர்ஜோத் சிங் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் பன்வாரிலால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.