ராஜினாமா செய்ய ‘கெடு’: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!!

சென்னை : தலைமை உத்தரவை ஏற்று ராஜினாமா செய்யாத, தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக, தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதில், பட்ஜெட் மீதான விவாதத்தில் யார் யார் பேசுவது; எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சபையில் அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தால், அவர்களை எதிர்த்து பேசும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம். எதிர்க்கட்சி என்ற முறையில், அ.தி.மு.க., அப்படி நடந்து கொள்வது வழக்கமானது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.

Leave a Reply

Your email address will not be published.