தொழில் துறையினருக்கு பட்ஜெட்டால் பலன் இல்லை: பா.ஜ., வானதி கருத்து!!

கோவை: ”தொழில் துறையினருக்கு பலன் தரும் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லாதது வருத்தம் அளிக்கிறது,” என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.

தமிழக அரசின் பட்ஜெட் குறித்து வானதி சீனிவாசன் கூறியதாவது:கோவையில் ஐந்து கோடி மதிப்பில் கயிறு வணிக நிறுவனம் அமைக்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொள்ளாச்சியில் கயறு வாரிய அலுவலகம் செயல்படுகிறது. அதனால் புதிய திட்டங்களை கொண்டு வருவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.