சீண்டியவரை தாவி கடித்த பாம்பு!!!
பெங்களூரு: சிர்சியில் பாம்புகளை சீண்டியவரை தாவி கடித்த பாம்பு குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. மாலத்தில் சிர்சியை சேர்ந்தவர் பாம்பு ஆர்வலர் மாஸ் செய்யது. இவர் ஒரு காட்டுப்பகுதியில் 3 பாம்புகளுக்கு முன் அமர்ந்து தனது கைகளை அசைத்து பாம்புகளை சீண்டிக்கொண்டிருந்தார். அப்போது இவரின் கையின் அசைவுக்கு ஏற்றவாறு பாம்புகளும் வலைந்துக்கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக ஒரு பாம்பு தாவி அவரின் மூட்டுப்பகுதியில் கடித்தது. அதிர்ச்சி அடைந்த அவர் அதனை இழுக்க முயன்றார்.
இருப்பினும் பாம்பு அவரை விடாமல் இருக்கமாக கடித்தது. பின்னர் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு 46 விஷ எதிர்ப்பு மருந்துகள் கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாம்பு கடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஐஎப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா, நாகப்பாம்புகளை கையாண்டது மிக மோசமான வழிமுறை என பதிவிட்டிருந்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.