வங்க கடலில் புயல்; மீனவர்களுக்கு தடை!!
சென்னை: வங்க கடலில் புயல் சின்னம் உருவாவதால், 20ம் தேதி வரை அந்தமான் பகுதிக்கு மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பு: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று வறண்ட வானிலை நிலவும். பகல் நேர வெப்பநிலை இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக பதிவாகும்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில், நாளை முதல் 21ம் தேதி வரை மிதமான மழை பெய்யும். வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அந்தமான் அருகில் நகர்ந்து, 21ம் தேதி புயலாக வலுப்பெறும்.
22ம் தேதி வங்க தேசம் மற்றும் வடக்கு மியான்மர் கரையை நெருங்கும்.எனவே, அந்தமான் கடல் பகுதி மற்றும் தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு, 75 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்கள் வரும் 20ம் தேதி வரை அங்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.