சென்னையில் மழை நீர் வடிகால் பணி: விரைவாக முடிக்க ஸ்டாலின் உத்தரவு!!
சென்னை, மார்ச் 18-‘பருவமழை காலத்தில், சென்னையில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடக்கும் மழை நீர் வடிகால் பணிகளைத் தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும்’ என அலுவலர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
வடகிழக்கு பருவமழையால், கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், சென்னை மற்றும் மாநிலத்தின் பல்வேறு பாதிக்கப்பட்ட பகுதிகளை, முதல்வர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையில், வெள்ள மேலாண்மை குழு அமைத்து, முதல்வர் உத்தரவிட்டார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.