அரசு பள்ளிகளை நவீனப்படுத்த புதுத்திட்டம்!
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் தியாகராஜன் கூறியதாவது: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் முன் மாதிரி பள்ளிகள் துவங்கப்பட்ட நிலையில் மேலும் 15 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்காக 125 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசு பள்ளிகளை நவீனமயமாக்குவதற்கான, ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்’ என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில், அரசு பள்ளிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 18,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.