போர் காரணமாக ரஷியாவின் தடுப்பூசியை அங்கீகரிப்பதில் தாமதம்- உலக சுகாதார அமைப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ரஷியாவில் தான் முதன் முதலாக தடுப்பூசி உருவாக்கப்பட்டது. 2020 ஆண்டு ஆகஸ்ட்  மாதம், ரஷியாவின் கமலேயா தேசிய தொற்று நோயியல், நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம்தான் இந்த தடுப்பூசியை உருவாக்கியது.

அதன் பிறகு ரஷியா உட்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்புட்னிக் வி  தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டு நம் நாட்டில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் – வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உபயோகிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இருப்பினும் ‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்க, மேலும் சில தரவுகளை, அதன் தயாரிப்பு நிறுவனத்திடம் உலக சுகாதார அமைப்பு கோரி இருந்தது.
அதன் பிறகு  ரஷியா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போர் தற்போது தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் தற்போது உலக சுகாதார அமைப்பு (WHO) அவசரகால பயன்பாட்டிற்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி  கொரோனா வைரஸ் தடுப்பூசி மீதான மதிப்பீட்டை தாமதப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மார்ச் 7 ஆம் தேதி ரஷியாவில் ஆய்வு செய்ய செல்லவிருந்த  உலக சுகாதார அமைப்பு குழு ரஷியா தொடுத்துள்ள போர் காரணமாக செல்லவில்லை. இதனால் அவசரகால பயன்பாட்டிற்காக ஸ்புட்னிக் வி  தடுப்பூசியை அங்கீகரிப்பதில் தொடர்ந்து தாமதம் நிலவி வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.

Leave a Reply

Your email address will not be published.