சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா தொற்று!

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நூற்றுக்கணக்கானோர் கொரோனா பரிசோதனை செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால் ஒட்டுமொத்தமாகச் சீனாவும் திணறி வருகிறது. சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசை எந்தவொரு நாடும் இதுவரை முழுமையாக ஒழிக்கவில்லை. பல்வேறு நாடுகளும் கொரோனா வைரசுடன் இணைந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டது.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் சீனாவின் வடகிழக்கு நகரமான சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர தொடங்கியிருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு நகரங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. தொற்று அதிகரிப்பதை அடுத்து கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க சீன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் பரிசோதனை மையங்களில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக அந்த பகுதியில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் ஷென்சென், ஜிலின் உள்பட சுமார் 10 நகரங்களில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாக சீனாவின் வடகிழக்கு நகரமான சாங்சுனில் தொற்று அதிகரிப்பு தீவிரமாகியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.

Leave a Reply

Your email address will not be published.